கோவில்பட்டி …20 years flashback...
ஒரு காலைப்பொழுது...
6 am: எப்பவும் போல சூரியன் கிழக்குல உதிச்சிருக்கும்…!!
7 am : ரொம்ப பேர் சோம்பல் முறிச்சிருப்போம்...
சில பேர் tooth brush-உம் கையுமா இருந்துருப்போம்...
8’0 clock : Peak hour start ஆகி இருக்கும்…
School uniform, School bag – இதோட நம்மளும் school-க்குப் போக Ready ஆகிட்டு இருந்துருப்போம்...
இது வரைக்கும் நடந்த 'வழக்கம் போல்' சமாச்சாரம் எல்லாமே எல்லார் வீட்டுலையும் நடக்குற மாதிரிதான் எங்க வீட்டுலையும் நடக்கும்...
But மணி 8.45 ஆகும் போது….அந்த சத்தம் “க்ரீஈஈஈஈஈச்ச்ச்ச்ச்...”
அந்த சத்தம் first time கேட்கும் போது ரொம்ப வித்தியாசமா இருந்தாலும்….
போகப் போக அதுவே எனக்கு ஒரு Sound Alarm மாதிரி ஆயுடிச்சி...
அந்த சத்தம் எங்க வீட்டுக்கு மட்டும் இல்ல, எங்க தெருவுக்கே கேட்குமே!!
அட ! அப்படிப்பட்ட சத்தம் எதுல இருந்து வந்துச்சுனு நான் இன்னும் சொல்லலியே…!
அந்த சத்தம் (“க்ரீஈஈஈஈஈச்ச்ச்ச்ச்...”) வந்ததுதான் தாமதம்…
எங்க வீட்ல எல்லாரும் என்கிட்ட chorus-ஆ சொல்வாங்க,
“டேய் ! Arun Prakash வந்துட்டான்ன்ன் !!”
நானும் அருணும் சேர்ந்து ஸ்கூலுக்கு போயிகிட்டு இருந்ததுனால…
Morning time அவன் போற வழில என்ன கூப்பிட வர்றதும்…
அதனால அந்த சத்தமும் சேர்ந்து வர்றதும் அப்போ எங்களுக்கு routine ஆயிடிச்சு…
எதனால அப்படி ஒரு சத்தம் வந்ததுனு அருண் வச்சிருந்த
BSA Streetcat cycle–கிட்டதான் கேட்கணும் !!!
இன்னும் எனக்கு அந்த சத்தம் நல்லா ஞாபகம் இருக்கு…
இருபது வருஷதுக்கு முன்னாடி நடந்த –
நான், அருண் மற்றும் Streetcat சம்பத்தப்பட்ட இந்த ஞாபகத்த இங்க பத்திரப்படுத்தி வைக்கலாமேன்னு ஒரு யோசனை!!
“ஏன்டா ! இதுக்கு நாங்கதான் உனக்கு கிடைச்சோமா ???”
- இப்டி யாரும் என்கிட்ட சண்டைக்கு வராத வரை...
யோசனைகள் தொடரும் ;-)!!


4 comments:
Yoosanai thodarattum da :)
Ha ha ha......
Ennum unkita niraya expect panrum vel
Ennum unkita niraya expect panrum vel
Post a Comment