Sunday 14 August 2022

சில நேரங்களில் சில மழை!

Saturday 4 February 2017

என்ன சத்தம் அந்த நேரம்...

கோவில்பட்டி …20 years flashback...


ஒரு காலைப்பொழுது...

6 am: எப்பவும் போல சூரியன் கிழக்குல உதிச்சிருக்கும்…!!

7 am : ரொம்ப பேர் சோம்பல் முறிச்சிருப்போம்...
சில பேர் tooth brush-உம் கையுமா இருந்துருப்போம்...

8’0 clock : Peak hour start ஆகி இருக்கும்
School uniform, School bag – இதோட நம்மளும் school-க்குப் போக Ready ஆகிட்டு இருந்துருப்போம்...

இது வரைக்கும் நடந்த 'வழக்கம் போல்' சமாச்சாரம் எல்லாமே எல்லார் வீட்டுலையும் நடக்குற மாதிரிதான் எங்க வீட்டுலையும் நடக்கும்...

But மணி 8.45 ஆகும் போது….அந்த சத்தம் க்ரீஈஈஈஈஈச்ச்ச்ச்ச்...”

அந்த சத்தம் first time கேட்கும் போது ரொம்ப வித்தியாசமா இருந்தாலும்….
போகப் போக அதுவே எனக்கு ஒரு Sound Alarm மாதிரி ஆயுடிச்சி...

அந்த சத்தம் எங்க வீட்டுக்கு மட்டும் இல்ல, எங்க தெருவுக்கே கேட்குமே!!

அட ! அப்படிப்பட்ட சத்தம் எதுல இருந்து வந்துச்சுனு நான் இன்னும் சொல்லலியே…!

அந்த சத்தம் (“க்ரீஈஈஈஈஈச்ச்ச்ச்ச்...”) வந்ததுதான் தாமதம்
எங்க வீட்ல எல்லாரும் என்கிட்ட chorus- சொல்வாங்க,
டேய் ! Arun Prakash வந்துட்டான்ன்ன் !!”

நானும் அருணும் சேர்ந்து ஸ்கூலுக்கு போயிகிட்டு இருந்ததுனால
Morning time அவன் போற வழில என்ன கூப்பிட வர்றதும்
அதனால அந்த சத்தமும் சேர்ந்து வர்றதும் அப்போ எங்களுக்கு routine ஆயிடிச்சு

எதனால அப்படி ஒரு சத்தம் வந்ததுனு அருண் வச்சிருந்த
BSA Streetcat cycle–கிட்டதான் கேட்கணும் !!!

இன்னும் எனக்கு அந்த சத்தம் நல்லா ஞாபகம் இருக்கு

இருபது வருஷதுக்கு முன்னாடி நடந்த
நான், அருண் மற்றும் Streetcat சம்பத்தப்பட்ட இந்த ஞாபகத்த இங்க பத்திரப்படுத்தி வைக்கலாமேன்னு ஒரு யோசனை!!

ஏன்டா ! இதுக்கு நாங்கதான் உனக்கு கிடைச்சோமா ???”
- இப்டி யாரும் என்கிட்ட சண்டைக்கு வராத வரை...

யோசனைகள் தொடரும் ;-)!!


Saturday 24 August 2013

"பெங்களூரில் ஒரு நாள்" - 21/08/13



சென்னையில் ஒரு நாள் படத்த கன்னடத்துல Remake-க்குனா  இப்படி தான் Title வைப்பாங்களோ ?! இல்ல "பெங்களூரல்லி ஒன்டே தினா" -- அப்டீன்னு கூட வைக்கலாம்!!

But இங்க நான் சொல்லப்போற  விஷயம் வேற!

இப்போ நம்ம  எல்லாருக்கும்  இருக்குற Hectic Life style-ல நாலு School Friends சேர்ந்து meet பண்றது ரொம்ப அபூர்வமான விஷயம்.

சம்பத்தப்பட்ட நாலு பேரும் குறிப்பிட்ட நேரத்துல Free-யா இருக்கணும் ; 
Meet பண்ற interest-டோட இருக்கணும்!

அப்படியான சூழ்நிலை எங்க நாலு பேருக்கும் அமைஞ்சதால தான் இந்த "பெங்களூரில் ஒரு நாள்" 21/08/13 - Friends' Meet சாத்தியமாச்சு!

அந்த நாலு பேரு வேற யாருமில்ல {நிவாஸ், பிரியா, வசந்தி மற்றும் நான்}!

                                     --------------------------------------------------------------------------------------------------

"மார்த்தஹல்லி to Majestic 45 minutes-ல போயிடலாம் தானே"

"பெங்களூர் traffic-ல ரொம்ப கஷ்டம்...Doubt-தான் - ஏன்னா Majestic to மார்த்தஹல்லி வர்றதுக்கு ஒண்ணரை மணி நேரம் ஆச்சு"

நான் 45 minutes-ல போயாகணுமே!

எப்படி...எதுக்கு...என்ன அப்படி அவசியம் / அவசரம் !!

Mission starts now!

மணி 9.15 pm @ மார்த்தஹல்லி!

(மார்த்தஹல்லி Area-ல தான் நிவாஸ் வீடும் பிரியா வீடும் இருக்கு)

நிவாஸ் கார் மார்தஹல்லி bus stop கிட்ட வந்தது.

"ஹே! Volvo city bus ready-யா நிக்குது -- இத புடிச்சா சீக்கிரம் போயிடலாம்!"
- நிவாசும் ப்ரியாவும் chorus-ஸா சொன்னாங்க 

நான் நிவாஸ் காருல இருந்து Bus-க்கு shift ஆனேன்...

But 45 minutes-ல Majestic போயிரலாமா???...தெரியல... ....!!!

.... .... ....


>>>>>> 3 hrs (Flash) back --- i.e) 6.15 pm @ மார்த்தஹல்லி!

நிவாஸ் office முடிஞ்சு வீட்டுக்கு சீக்கிரம் வந்து, Get Together க்கு ready-யா இருந்தான்.
அவனோட செல்ல குட்டிப் பயல் முகுந்த் (1.7 yrs old) அப்பாவை தனியா வெளிய விடுறதா  இல்ல...அப்படியே வெளிய போனாலும் அவனையும் கூட்டிகிட்டு தான் போகணுமாம்...ஒரே அடம்...நிவாஸ் எப்படி கிளம்பலாம்னு யோசிச்சிக்கிட்டு இருக்கும்போது...

"டேய் நான் official meeting லாம் முடிஞ்சு கிளம்பியாச்சு...On the way...
ஏழு மணிக்குள்ள நீ சொன்ன மாதிரி மார்த்தஹல்லி reach ஆயுடுவேன்" - நான் நிவாஸ் கிட்ட Phone-ல சொன்னேன்.

நிவாஸ்:- "Ok - அப்போ நீ Spice garden stop-ல இறங்குனதும் சொல்லு...நான் வந்து pick -up பண்ணிக்குறேன்"

இன்னொரு phone call..

"எப்படியும் நீங்க எல்லாரும் சேர்ந்து SPOT-க்கு வர ஒரு ஏழரை மணி ஆகுமா"- வசந்தி phone-ல கேட்டாள்...

பெலன்தூர் Bangalore Central Mall தான் நாங்க fix பண்ணின அந்த Meeting Spot!


7.10 pm

நான் நிவாஸ் சொன்ன மாதிரி மார்த்தஹல்லி Spice garden stop-க்கு வந்துட்டேன்...
முகுந்த் அவன் அப்பாவை தனியா வெளிய விடுறதா இல்லை...So நிவாஸ் பையனையும் கூட்டிட்டு போகலாமேன்னு முடிவு பண்ணினான்...
போகுற எடத்துல சுட்டி பையன் சும்மா இருக்க மாட்டானே...அங்கேயும் இங்கேயம் ஓடுவானே..அவன பார்த்துக்க wife கௌசல்யாவையும் கூடவே கெளம்ப சொன்னான்...

Family ஓட car-ல புறப்பட்டான்...


7.30 pm

நிவாஸ் போற வழில என்னையும் pick-up பண்ணிகிட்டான் 

அப்போதான் ப்ரியா தன்னோட ரெண்டு பசங்களையும் அவ Husband கிட்ட பார்த்துக்க சொல்லி,
பசங்க கண்ல படாம escape ஆகவும்...

எங்க car ப்ரியா வீடு இருந்த Rohan Vasantha Apartments Entrance  கிட்ட வரவும் சரியா இருந்தது...

நிவாஸ் & family, ப்ரியா மற்றும் நான் எல்லாம சேர்ந்து Bangalore Central Mall-க்கு பயணமானோம்....

"பசங்க ரெண்டு பேரையும் கூட்டிகிட்டு வந்தா அப்புறம் Mall-லையே  ஒரு வழி பண்ணிருவாங்க...பெரியவனக் கூட சமாளிச்சுருவேன் ஆனா இந்த சின்னது இருக்கே ரெட்ட வாழு...எனக்கு இவங்க பின்னாடி ஓடவே நேரம் சரியாய் இருக்கும்...அதான் வீட்லயே விட்டுட்டு வந்துட்டேன்", ப்ரியா தன்னோட status update-ட சொன்னாள்!

கௌசல்யாவும் ப்ரியாவும் Car Driving பத்தி பேசிகிட்டாங்க...

Husband பக்கத்துல இல்லாம இருந்தா எந்த ஒரு பொண்ணும் தைரியமா Car ஓட்டலாம்,
ப்ரியா தன் experience-ஸ share பண்ணாள்...

Bcoz car ஓட்டும்போது ரொம்ப கவனமா இருக்கணும் பேர்வழினு கணவன்மார்கள் பக்கத்துல உட்கார்ந்துகிட்டு careful instruction கொடுக்கறதா நெனச்சு பண்ற torture-ல ஒரு வித பயம் தான் மிஞ்சும்...இதுல எப்படி Confident-ஆ  car ஓட்ட முடியும்!

மொத்ததுல ஒரு Freedom இருந்தாதான் பெண்களுக்கு எதையும் independent-ஆ சாதிக்க முடியும்னு அவங்க பேச்சு உணர்த்துச்சு!

போகுற வழிலேயே வசந்திக்கு call பண்ணி On the way -னு எங்க combined status update'ட பண்ணியாச்சு!

Bangalore central mall இருக்கறது பெலன்தூர் area...வசந்தி வீட்டுல இருந்து ரொம்ப பக்கம்...

வசந்தி அவளோட 4th STD படிக்குற  பையனை (வருண்) ஹிந்தி class-க்கு அனுப்பிட்டு எங்க கூட Join பண்ணிக்க தயாரா இருந்தாள்...


7.50 pm

ஒரு வழியா எல்லாரும் SPOT-க்கு வந்து சேர்ந்தோம் 

ப்ரியாவும் வசந்தியும் நேர்ல பார்த்து பல வருஷம் இருக்கும்...

எப்டி இருக்கே ?
வீட்ல சௌக்கியமா?
பையன் என்ன பண்றான்?

இப்படியான குசல விசாரிப்புகள்ள தொடங்கி நிறைய பேசினோம்...

// முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு //

இந்த திருக்குறளோட அர்த்தத்துக்கு அன்னைக்கு அங்க ஒரு Live Demo நடந்தது!

குறிப்பா பசங்க வீட்ல பண்ற சேட்டைகள பத்தின பேச்சு சுவாரஸ்யமா இருந்தது...

கௌசல்யா நிவாஸ் சொன்னாங்க: "இந்த முகுந்த் இருக்கானே Day Care Centre-ல அதுக்குள்ள ஒரு Girl Friend புடிச்சுட்டான்" அதுவும் ரொம்ப selective-வா ஒரு கேரளா பொன்னா பார்த்து பழகுரானாம்!
அது சரி...மொளைச்சு ரெண்டு இலை கூட விடலை...i mean ரெண்டு வயசு கூட ஆகலை....
அதுக்குள்ள இப்டியா...முகுந்த் பின்ட்றியேடா...
அறியாத வயசு...புரியாத மனசு...!

8.30 pm

வசந்தியோட கணவர் விஜய் பையன Hindi Tution லருந்து கூப்பிட்டு அப்படியே இவளையும் pick -up பண்ண வந்தார்...எங்க ஜோதில அவரும் ஐக்கியம் ஆனார்

But food எதுவும் வேணாம்னு light ஆ ஒரு Juice ஓட நிறுதிக்கிட்டார்...

வருண் ரொம்ப குஷியா  இருந்தான்...சின்ன பசங்களுக்கு Outing வந்து வித விதமா food  items பார்க்கும்போது ஏற்படுற சந்தோஷமே தனி!

விஜய் கிட்டயும் நான் கேட்டேன் -- "மார்தஹல்லி to Majestic 45 minutes-ல போயிடலாமா"!!
இந்த கேள்வி மட்டும் எனக்கு ஒரு Suspenseஆவே இருந்தது!

"என்ன அவசரம்" - விஜய் கேட்டார்.

அப்போதானே நான் Majestic-ல என்னோட Hotel Room Check-out பண்ணி Night கிளம்புற Chennai Express-ஸ புடிக்க முடியும்!!!

பிரியுற நேரம் வந்தது...

வசந்தி & family -க்கு bye சொல்லிட்டு நாங்க car parking-ல எங்க car-அ விட்டோம்னு தேட...
மார்த்தஹல்லி பஸ் stop-க்கு சீக்கிரம் போயிரலாமா...தெரியலையே...!!

கார்-ல கிளம்புனதும் நிவாஸ்க்கு ஒரு Official conference call வந்தது...
எதோ US client -ஆம்...Avoid பண்ண முடியாதாம்...
நிவாஸ் Bluetooth-ல call attend பண்ணிகிட்டே car drive பண்ணான்...
இந்த US தொழிலதிபர்கள் தொல்ல தாங்க முடியலட சாமி!

9.15 pm -- Back to மார்த்தஹல்லி!

நிவாஸ் கார் மார்தஹல்லி bus stop கிட்ட வந்தது.

"ஹே! Volvo city bus ready-யா நிக்குது -- இத புடிச்சா சீக்கிரம் போயிடலாம்!"
- நிவாசும் ப்ரியாவும் chorus-ஸா சொன்னாங்க 

நான் நிவாஸ் காருல இருந்து Bus-க்கு shift ஆனேன்...

But 45 minutes-ல Majestic போயிரலாமா???...தெரியல... ....!!!
.... .... ....

இரவு மணி பத்தாச்சு 

Unbelievable!! ஒரு வழியா நான் வந்த Bus Majestic Reach ஆச்சு!
இதே Distance-அ Evening Peak  Hour Traffic-ல கடந்து போகும்போது ஒன்னரை மணி நேரம் ஆனதுதான் என்னோட பயத்துக்கு காரணம்!

Mission Ends!

All credit goes to Nivas, Priya & Vasanthi (with their family support)!
எல்லாரும் சேர்ந்து ஒரு Meet போடலாமான்னு சும்மா நான் கேட்டத மதிச்சு, எவ்வளோவோ Personal Commitments க்கு இடையில, சொன்னபடி வந்து, Meet-ல கலந்துகிட்டு, என்னோட பெங்களூரில் ஒரு நாள (21/08/13) ஒரு Memorable Day-யா மாத்துனதுக்கு!

நன்றி,
Vel

Sunday 6 December 2009

Paa


Paa...ஹிந்தி படம்...அமிதாப் பச்சன் & அபிஷேக் பச்சன்...நெஜதுக்கு புறம்பா மகன் அப்பாவா நடிச்சு வெளி வந்திருக்குற படம்...படம் ரொம்ப சிறப்பாவும் Touching-ஆவும் இருக்கறதா நம்ப தகுந்த வட்டாரங்கள்ளருந்து தெரிய வருது...

பொதுவா ஹிந்தி படங்கள்ல எனக்கு பெரிய ஈடுபாடு கிடையாது...ஏன்னா எனக்கு ஹிந்தி தெரியாது! எப்டியாவது கத்துக்கணும்னு நான் School Days நெனச்சதுண்டு...But அதுக்கு நான் பெருசா முயற்சிகள் எடுக்கலை...
எடுத்த சின்ன சின்ன முயற்சிகளுக்கும் பலன் இல்லாமலேயே போயிரிச்சு...

ஆனாலும் ஹிந்தி படம் தியேட்டர்ல போயி கூட பாத்துருக்கேன்...'ஊர்மிலா & சஞ்சய் தத் நடிச்ச 'DAUD' அப்டீங்கற ஹிந்தி படம் கோவில்பட்டி ஷண்முகா தியேட்டர்-ல ரிலீஸ் ஆச்சு...நானும் ராபர்டும் சேர்ந்து போனோம்...அவனுக்கு ஹிந்தி தெரிஞ்சதுனால அப்பப்போ Meaning கேட்டுகலாமேனு...அட! A.R.R.ரஹ்மான் Music-க்காக'தான் 'DAUD' போனோம்'பா - அப்டீன்னு வெளிய சொல்லிகர்றதான்! படம் ஓடும் பொது நடு-நடு'வுல "அவன் என்ன சொன்னான், அவ என்ன சொன்னா" - இப்டி கேட்டு கேட்டு இம்சை பண்ணதுல ராபர்ட் நொந்து Noodles ஆனது வேற கதை!

அது போகட்டும்...

So, பொதுவா ஹிந்தி படங்கள்ல எனக்கு ஈடுபாடு கிடையாது..
ஆனா, Paa - இதுல விதிவிலக்கு...காரணம் இளையராஜா...
இந்த படத்துக்கு இளையராஜா-தான் மியூசிக்...

படத்தோட ஸ்கிரிப்ட் அவருக்கு பிடிச்சதுனா அதுக்கப்புறம் அவர் கிட்டருந்து அருவி மாதிரி Tunes வருமே...இதுலயும் அப்படிதான் வந்துருக்கு...எல்லா பாட்டுமே சும்மா நச்சுனு இருக்கு...
கண்ண மூடிகிட்டென்ன....காதைத் தவிர எல்லாத்தையும் மூடிகிட்டே கேக்கலாம்...கேட்டுகிட்டே இருக்கலாம்...
Typical ஹிந்தி Songs-ஓட சாயல் கொஞ்சம் கூட இல்ல...
Infact, karaoke -ல கேட்டா தமிழ் பாட்டு மாதிரிதான் இருக்கும்...கொஞ்சம் அங்க அங்க அவரோட பழைய Tunes-யும் Use பண்ணிருக்கார்...

குறிப்பா பவதாரணி Voice-ல "Gumm Summ Gumm" இளையராஜாவோட Golden Tunes-ச ஞாபகப் படுத்துது...
இதுல ஒரு Drawback என்னென்னா...மொத்தம் எட்டு Tracks-ல நாலு தான் Normal length...மத்ததெல்லாம் Bit song-தான்...
So இந்த இசை அருவில அளவாதான் நனைய முடியும்!
அப்படி நனைய ஆசை படுறவங்க
இந்த Link-அ Click-கலாம்!

Monday 18 May 2009

Swayed by Hard focus !!


1) ஒரு நல்ல புஷ்டியான Black Dog வந்து என்னைய பயமுறுத்திச்சு…
- இது நேத்து ராத்திரி நான் கண்ட கனவுல நடந்தது…

2) ஆர்யா நடிச்ச ‘சர்வம்’ படம்…
- இது நேத்து Matinee show நான் பார்த்தது…

மேல சொன்ன ரெண்டு Statement-கும் என்ன சம்பந்தம்னு 'சர்வம்' படத்துனால பாதிக்க பட்டவங்களுக்கும் இனிமே பாதிக்கப்படப் போறவங்களுக்கும் நல்லாவே புரியும்…!!

'சர்வம்' – படம் பார்க்க நான் ஏன் போனேன்…
நல்ல Music (யுவன்) + நல்ல Direction (விஷ்ணுவர்த்தன்)
+ நல்ல Acting (ஆர்யா / த்ரிஷா)
– இப்டியெல்லாம் நம்பிதானே…

But இது எல்லாமே இருத்தும் – STORY-தான்ன்ன்….
படத்ல கதையே இல்லன்னு நான் சொல்ல வரலை…
But எடுத்துகிட்ட Story நல்லாவே இல்ல…Great disappointment…

மத்தபடி, Camera work ரொம்பவே பிரமாதமா இருந்தது…
Forest scenes-லாம் Blue filter போட்டு பகல்ல shoot பண்ணி, நெஜமாவே இருட்டுல நடக்குற மாதிரி காமிச்சிருக்கார் Camera man நிரவ் ஷா…

அப்புறம் யுவனோட கை வரிசைல Songs-லாம் கேட்க நல்லா இருக்கு…
குறிப்பா ‘சுட்டா சூரியன’ song-ல இளையராஜாவோட “மேகம் கருக்குது மழை வரப் பாக்குது” – bit‘அ insert பண்ணது super…

“காற்றுகுள்ளே..” song picturisation ரொம்ப வித்யாசமா இருந்தது…


படத்ல ரொம்ப ரசிக்க வச்ச ஒரு அம்சம்,
இளையராஜாவோட Violin + Guitar piece Re-recording-அ,
ஆர்யா - த்ரிஷா meet பண்ற scenes-க்கு use பண்ணிய விதம்…

இருபது வருஷதுக்கு முன்னாடி அப்பா compose பண்ணி வச்சத மகன் ரொம்ப உரிமையோட இப்போ Apply பண்ணி இருக்கார்…
Really nice to listen (Have your try in the above esnips widget)

படத்ல soft focus => த்ரிஷா ;
Hard focus => அந்த பயங்கரமான Black Dog !

Bachelors-க்கு எப்படியோ எனக்கு தெரியல…
But என்னோட கனவுல அந்த Black Dog-தான் வந்து மெரட்டுச்சு…!!

Saturday 7 February 2009

எப்படி இருந்த நாங்க, இப்படி ஆயிட்டோம் !!

எப்படி இருந்த நானும் அருணும்...>>


....
....
....

இப்படி ஆயிட்டோம் !! >>


Friday 22 August 2008

கோபி, நான், மற்றும் பலர்...!

கோபியும் எனக்கு ரொம்ப சின்ன வயசிலேயே பரிட்சயம் ஆயிட்டான்… எனக்கு அருண் பிரகாஷ் familiar ஆன அதே Little Flower school-அ-தான் இவனும்… …

அதாவது 1985-ல… அப்போ இந்திரா காந்தி இறந்து ஒரு வருஷம் கூட ஆகலை…

Terrorist and Disruptive Activities (Prevention) Act (TADA) parliament-ல அமுல் படுத்தப்பட்ட வருஷம் அது…

கோபியோட அப்பா ஸ்கூலுக்கு அவன சைகிள்ல கூட்டிட்டு வருவாரு…

எனக்கு ரொம்ப நல்லா ஞாபகம் இருக்குன்னு சொல்ல முடியாது…

but light-ஆ… …

சைகிள்ல back side carrier-ல வச்சா கீழ விழுந்துருவான்னு front side mini seat-ல வச்சு ரொம்ப careful-ஆ கூட்டிட்டு வருவாரு அவன் அப்பா…

அப்போ எங்க ரெண்டு பேரோட வீடும் V.O.C. நகர்ல இருந்ததுனால அடிக்கடி ஸ்கூலுக்கு போகும் போது or வரும்போது அப்பபோ பாத்துக்குவோம்…

1986 ஜூன் வந்தது,

கோபி, நான், எல்லாம் 1st STD-க்கு promote ஆனோம், சானியா மிர்சா மும்பைல பிறக்கறதுக்கு முன்னாடியே (சானியா பிறந்தது அதே வருஷம் நவம்பர் 15th) !

நல்லவேளை அப்போ 1st STD-க்கு entrance test-லாம் இல்ல…!

But சானியா மிர்சா பிறந்ததுக்கும் நாங்க pre-school pass பண்ணதுக்கும் Chaos theory-படி பார்த்தா கூட ஒரு சம்பந்தமும் கிடையாது !

1987 முடிவுல M.G.R -கும் ஒரு முடிவு வந்துருச்சு…

1988–ல Little flower ஸ்கூல் கோபிக்கு பிடிக்கலையோ என்னமோ, அவன் வேற ஸ்கூலுக்கு 3rd STD படிக்க போயிட்டான்…

1989 :

Lok Sabha elections முடிஞ்சு V.P. சிங்க் Prime Minister ஆனாரு…

உத்தர் பிரதேஷ்-ல முலாயம் சிங்க் யாதவ் first time chief minister ஆனாரு…

1990 :

நவம்பர்ல - V.P. சிங்க் PM post-ல இருந்து resign பண்ணிட்டாரு…

Ok…ok… title - "கோபி, நான், மற்றும் பலர்னு" சொல்லிட்டு இவன் பாட்டுக்கு, இந்திரா காந்தி - M.G.R - V.P சிங்க் -னு News reel ஒட்டிக்கிட்டு இருக்கானேன்னு நெனைக்க வேண்டாம்…

Superstar வெறும் 40 நிமிஷமே வந்தாலும் குசேலன் Rajni படம்தானே…!!

1991 : நாட்டுல பல மாற்றங்கள் நடந்தது இந்த வருஷம்தான்…

மே 21 :- இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்குன great Prime Minister ராஜீவ் காந்தி படு கொலை செய்யப்பட்டார்...

ஜூன் 21 :- P.V. நரசிம்ம ராவ் Prime Minister ஆனாரு…

ஜூன் 24 :- ஜெயலலிதா முதல் முறையா தமிழ்நாட்டோட chief minister ஆனாங்க…

இது எல்லாத்தையும் விட ஒரு historical event -உம் நடந்தது !

கோபி, அருண், பாலாஜி, சங்கர், நான் மற்றும் பலர் NHSS-குள்ள காலடி எடுத்து வைச்சோம்…!!

ஸ்கூல் days-ல கோபி நல்லா படிப்பான், but அவனுக்கு hand writing-தான் அவ்வளவு சரியா வரலை…

ஒரு தடவை, அவனோட அம்மா (C.விஜயலக்ஷ்மி Madam) கோபிகிட்ட என்னோட handwriting-அ compare பண்ணி சொன்னது இன்னும் ஞாபகம் இருக்கு :-

“கோபி, இங்க பாரு இவன் எப்படி அழகா எழுதுறான்னு பாரு, நீயும் இதே மாதிரி எழுத கத்துக்கோடா"

“என்ன கொடுமை, CV madam, இது !” (நான் மனசுக்குள்ள நெனச்சுகிட்டேன்!)

கோபி அம்மா-கிட்ட science tuition படிச்சத பத்தி ஒரு தனி episode-ஏ சொல்லலாம்…

10th STD-ல நான், ராபர்ட், ஸ்ரீராம் மற்றும் பலர் கொண்ட குழு கோபி வீட்டுக்கு CV madam-கிட்ட science படிக்க போனோம்…

கோபி அம்மாவா நல்லா jovial-ஆ பேசுனாலும் CV madam-ஆ அவங்க ரொம்ப strict…strict…strict…!!

Physics, chemistry, Biology – எல்லாத்துக்கும் தனித் தனி Long size note போட வச்சி… Science - Definitions / concepts எல்லாம் clear-ஆ heading-oda எழுத வச்சி…Weekly test வச்சி Marks போட்டு…செம training-தான் போங்க…

Class-ல கருப்பசாமி sir குழப்புன (!) அதே Science subject-அ,

CV madam எங்களுக்கு நல்லா புரிய வச்சாங்க…

அவங்க கிட்ட படிச்ச எல்லாரையும் 10th –ல நல்லா score பண்ணவும் வச்சாங்க…

கருப்பசாமி sir Class எடுக்குற style-ஏ தனிதான்…

முக்கியமா அவரோட English pronunciations எல்லாமே oru ‘Typical’-ஆ-தான் இருக்கும்…

அவரு conduct பண்ணின ONE WORD test எல்லாம் அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்க முடியாது… ஒரே period-ல Test வச்சி results-அயும் announce பண்ணிருவாரு…

ஏன்னா test paper valuation பண்ற வேலைய நம்ம கிட்டயே விட்டுருவாரு… Test அன்னைக்கு பாத்தீங்கன்னா class-குள்ள ஒரே exchange மேலா-தான்…!!

யாரு paper யாரு கிட்ட போகும்னே சொல்ல முடியாது…

எந்த answer-உம் தெரியலேனாலும் அப்போ அது கூட ஒரு ஜாலியாதான் இருந்தது…

நம்ம கோபி, கருப்பசாமி sir-க்கு நல்ல pet student-ஆ இருந்தான்னா அதுக்கு அவன் science-ல வாங்குன marks தான் காரணம்…

கோபி அவன் அம்மா சொன்னதுக்காக மட்டுமில்லாம,

ஒரு self-determination-ஓட Hard work பண்ணான்…

அதனோட result-தான் :- Hand-writing improve பண்ணது, +2-ல நல்ல marks வாங்குனது, Anna University-ல சேர்ந்தது , Campus interview placement, HCL, IBM...

- இப்டி பல உயரங்கள தொட்ட கோபியப் பத்தி சொல்லாம இருந்தா எப்படி !!