வேலும் மயிலும் துணையாம் முருகனுக்கு!
அந்நியன் வேடத்தில்,
வெயிலும் மழையும் இணையாம் வருண பகவானுக்கு!
அம்பி'யாக தயக்கத்துடன்
வெயிலின் ஊடே சிறு சாரல் மழை...
ரெமோ'வாகி பூங்காற்றுடன் குழைந்த ஒரு கீறல் மழை...
அந்நியனாக உருமாறி எட்டுத்திக்கும் தடதடக்கும் பெருமழை...
இடி மின்னல் நின்றாலும்...
நிற்காது பொழியும் தூறல் மழை!
நமக்கு மழை புடிக்கும்...
குடை பிடிக்காத சமயம்,
மழைக்கு நம்மை ரொம்ப புடிக்கும்..
பிறகு நமக்கு ஜலதோஷம் பிடிக்கும்!
வீட்டின் வெளியே,
தூவானம் நின்றாலும்,
தொடரும் சாரல் மழை...
வீட்டின் உள்ளே...
தும்மல் மழை!!
சில நேரங்களில் சில மழை!