சென்னையில் ஒரு நாள் படத்த கன்னடத்துல Remake-க்குனா இப்படி தான் Title வைப்பாங்களோ ?! இல்ல "பெங்களூரல்லி ஒன்டே தினா" -- அப்டீன்னு கூட வைக்கலாம்!!
But இங்க நான் சொல்லப்போற விஷயம் வேற!
இப்போ நம்ம எல்லாருக்கும் இருக்குற Hectic Life style-ல நாலு School Friends சேர்ந்து meet பண்றது ரொம்ப அபூர்வமான விஷயம்.
சம்பத்தப்பட்ட நாலு பேரும் குறிப்பிட்ட நேரத்துல Free-யா இருக்கணும் ;
Meet பண்ற interest-டோட இருக்கணும்!
Meet பண்ற interest-டோட இருக்கணும்!
அப்படியான சூழ்நிலை எங்க நாலு பேருக்கும் அமைஞ்சதால தான் இந்த "பெங்களூரில் ஒரு நாள்" 21/08/13 - Friends' Meet சாத்தியமாச்சு!
அந்த நாலு பேரு வேற யாருமில்ல {நிவாஸ், பிரியா, வசந்தி மற்றும் நான்}!
--------------------------------------------------------------------------------------------------
"மார்த்தஹல்லி to Majestic 45 minutes-ல போயிடலாம் தானே"
"பெங்களூர் traffic-ல ரொம்ப கஷ்டம்...Doubt-தான் - ஏன்னா Majestic to மார்த்தஹல்லி வர்றதுக்கு ஒண்ணரை மணி நேரம் ஆச்சு"
நான் 45 minutes-ல போயாகணுமே!
எப்படி...எதுக்கு...என்ன அப்படி அவசியம் / அவசரம் !!
Mission starts now!
மணி 9.15 pm @ மார்த்தஹல்லி!
(மார்த்தஹல்லி Area-ல தான் நிவாஸ் வீடும் பிரியா வீடும் இருக்கு)
நிவாஸ் கார் மார்தஹல்லி bus stop கிட்ட வந்தது.
"ஹே! Volvo city bus ready-யா நிக்குது -- இத புடிச்சா சீக்கிரம் போயிடலாம்!"
- நிவாசும் ப்ரியாவும் chorus-ஸா சொன்னாங்க
நான் நிவாஸ் காருல இருந்து Bus-க்கு shift ஆனேன்...
But 45 minutes-ல Majestic போயிரலாமா???...தெரியல... ....!!!
.... .... ....
>>>>>> 3 hrs (Flash) back --- i.e) 6.15 pm @ மார்த்தஹல்லி!
நிவாஸ் office முடிஞ்சு வீட்டுக்கு சீக்கிரம் வந்து, Get Together க்கு ready-யா இருந்தான்.
அவனோட செல்ல குட்டிப் பயல் முகுந்த் (1.7 yrs old) அப்பாவை தனியா வெளிய விடுறதா இல்ல...அப்படியே வெளிய போனாலும் அவனையும் கூட்டிகிட்டு தான் போகணுமாம்...ஒரே அடம்...நிவாஸ் எப்படி கிளம்பலாம்னு யோசிச்சிக்கிட்டு இருக்கும்போது...
"டேய் நான் official meeting லாம் முடிஞ்சு கிளம்பியாச்சு...On the way...
ஏழு மணிக்குள்ள நீ சொன்ன மாதிரி மார்த்தஹல்லி reach ஆயுடுவேன்" - நான் நிவாஸ் கிட்ட Phone-ல சொன்னேன்.
நிவாஸ்:- "Ok - அப்போ நீ Spice garden stop-ல இறங்குனதும் சொல்லு...நான் வந்து pick -up பண்ணிக்குறேன்"
இன்னொரு phone call..
"எப்படியும் நீங்க எல்லாரும் சேர்ந்து SPOT-க்கு வர ஒரு ஏழரை மணி ஆகுமா"- வசந்தி phone-ல கேட்டாள்...
பெலன்தூர் Bangalore Central Mall தான் நாங்க fix பண்ணின அந்த Meeting Spot!
7.10 pm
நான் நிவாஸ் சொன்ன மாதிரி மார்த்தஹல்லி Spice garden stop-க்கு வந்துட்டேன்...
முகுந்த் அவன் அப்பாவை தனியா வெளிய விடுறதா இல்லை...So நிவாஸ் பையனையும் கூட்டிட்டு போகலாமேன்னு முடிவு பண்ணினான்...
போகுற எடத்துல சுட்டி பையன் சும்மா இருக்க மாட்டானே...அங்கேயும் இங்கேயம் ஓடுவானே..அவன பார்த்துக்க wife கௌசல்யாவையும் கூடவே கெளம்ப சொன்னான்...
Family ஓட car-ல புறப்பட்டான்...
7.30 pm
நிவாஸ் போற வழில என்னையும் pick-up பண்ணிகிட்டான்
அப்போதான் ப்ரியா தன்னோட ரெண்டு பசங்களையும் அவ Husband கிட்ட பார்த்துக்க சொல்லி,
பசங்க கண்ல படாம escape ஆகவும்...
எங்க car ப்ரியா வீடு இருந்த Rohan Vasantha Apartments Entrance கிட்ட வரவும் சரியா இருந்தது...
நிவாஸ் & family, ப்ரியா மற்றும் நான் எல்லாம சேர்ந்து Bangalore Central Mall-க்கு பயணமானோம்....
"பசங்க ரெண்டு பேரையும் கூட்டிகிட்டு வந்தா அப்புறம் Mall-லையே ஒரு வழி பண்ணிருவாங்க...பெரியவனக் கூட சமாளிச்சுருவேன் ஆனா இந்த சின்னது இருக்கே ரெட்ட வாழு...எனக்கு இவங்க பின்னாடி ஓடவே நேரம் சரியாய் இருக்கும்...அதான் வீட்லயே விட்டுட்டு வந்துட்டேன்", ப்ரியா தன்னோட status update-ட சொன்னாள்!
கௌசல்யாவும் ப்ரியாவும் Car Driving பத்தி பேசிகிட்டாங்க...
Husband பக்கத்துல இல்லாம இருந்தா எந்த ஒரு பொண்ணும் தைரியமா Car ஓட்டலாம்,
ப்ரியா தன் experience-ஸ share பண்ணாள்...
Bcoz car ஓட்டும்போது ரொம்ப கவனமா இருக்கணும் பேர்வழினு கணவன்மார் கள் பக்கத்துல உட்கார்ந்துகிட்டு careful instruction கொடுக்கறதா நெனச்சு பண்ற torture-ல ஒரு வித பயம் தான் மிஞ்சும்...இதுல எப்படி Confident-ஆ car ஓட்ட முடியும்!
மொத்ததுல ஒரு Freedom இருந்தாதான் பெண்களுக்கு எதையும் independent-ஆ சாதிக்க முடியும்னு அவங்க பேச்சு உணர்த்துச்சு!
போகுற வழிலேயே வசந்திக்கு call பண்ணி On the way -னு எங்க combined status update'ட பண்ணியாச்சு!
Bangalore central mall இருக்கறது பெலன்தூர் area...வசந்தி வீட்டுல இருந்து ரொம்ப பக்கம்...
வசந்தி அவளோட 4th STD படிக்குற பையனை (வருண்) ஹிந்தி class-க்கு அனுப்பிட்டு எங்க கூட Join பண்ணிக்க தயாரா இருந்தாள்...
7.50 pm
ஒரு வழியா எல்லாரும் SPOT-க்கு வந்து சேர்ந்தோம்
ப்ரியாவும் வசந்தியும் நேர்ல பார்த்து பல வருஷம் இருக்கும்...
எப்டி இருக்கே ?
வீட்ல சௌக்கியமா?
பையன் என்ன பண்றான்?
இப்படியான குசல விசாரிப்புகள்ள தொடங்கி நிறைய பேசினோம்...
// முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு //
இந்த திருக்குறளோட அர்த்தத்துக்கு அன்னைக்கு அங்க ஒரு Live Demo நடந்தது!
குறிப்பா பசங்க வீட்ல பண்ற சேட்டைகள பத்தின பேச்சு சுவாரஸ்யமா இருந்தது...
கௌசல்யா நிவாஸ் சொன்னாங்க: "இந்த முகுந்த் இருக்கானே Day Care Centre-ல அதுக்குள்ள ஒரு Girl Friend புடிச்சுட்டான்" அதுவும் ரொம்ப selective-வா ஒரு கேரளா பொன்னா பார்த்து பழகுரானாம்!
அது சரி...மொளைச்சு ரெண்டு இலை கூட விடலை...i mean ரெண்டு வயசு கூட ஆகலை....
அதுக்குள்ள இப்டியா...முகுந்த் பின்ட்றியேடா...
அறியாத வயசு...புரியாத மனசு...!
அறியாத வயசு...புரியாத மனசு...!
8.30 pm
வசந்தியோட கணவர் விஜய் பையன Hindi Tution லருந்து கூப்பிட்டு அப்படியே இவளையும் pick -up பண்ண வந்தார்...எங்க ஜோதில அவரும் ஐக்கியம் ஆனார்
But food எதுவும் வேணாம்னு light ஆ ஒரு Juice ஓட நிறுதிக்கிட்டார்...
வருண் ரொம்ப குஷியா இருந்தான்...சின்ன பசங்களுக்கு Outing வந்து வித விதமா food items பார்க்கும்போது ஏற்படுற சந்தோஷமே தனி!
விஜய் கிட்டயும் நான் கேட்டேன் -- "மார்தஹல்லி to Majestic 45 minutes-ல போயிடலாமா"!!
இந்த கேள்வி மட்டும் எனக்கு ஒரு Suspenseஆவே இருந்தது!
"என்ன அவசரம்" - விஜய் கேட்டார்.
அப்போதானே நான் Majestic-ல என்னோட Hotel Room Check-out பண்ணி Night கிளம்புற Chennai Express-ஸ புடிக்க முடியும்!!!
பிரியுற நேரம் வந்தது...
வசந்தி & family -க்கு bye சொல்லிட்டு நாங்க car parking-ல எங்க car-அ விட்டோம்னு தேட...
மார்த்தஹல்லி பஸ் stop-க்கு சீக்கிரம் போயிரலாமா...தெரியலையே...!!
கார்-ல கிளம்புனதும் நிவாஸ்க்கு ஒரு Official conference call வந்தது...
எதோ US client -ஆம்...Avoid பண்ண முடியாதாம்...
நிவாஸ் Bluetooth-ல call attend பண்ணிகிட்டே car drive பண்ணான்...
இந்த US தொழிலதிபர்கள் தொல்ல தாங்க முடியலட சாமி!
வருண் ரொம்ப குஷியா இருந்தான்...சின்ன பசங்களுக்கு Outing வந்து வித விதமா food items பார்க்கும்போது ஏற்படுற சந்தோஷமே தனி!
விஜய் கிட்டயும் நான் கேட்டேன் -- "மார்தஹல்லி to Majestic 45 minutes-ல போயிடலாமா"!!
இந்த கேள்வி மட்டும் எனக்கு ஒரு Suspenseஆவே இருந்தது!
"என்ன அவசரம்" - விஜய் கேட்டார்.
அப்போதானே நான் Majestic-ல என்னோட Hotel Room Check-out பண்ணி Night கிளம்புற Chennai Express-ஸ புடிக்க முடியும்!!!
பிரியுற நேரம் வந்தது...
வசந்தி & family -க்கு bye சொல்லிட்டு நாங்க car parking-ல எங்க car-அ விட்டோம்னு தேட...
மார்த்தஹல்லி பஸ் stop-க்கு சீக்கிரம் போயிரலாமா...தெரியலையே...!!
கார்-ல கிளம்புனதும் நிவாஸ்க்கு ஒரு Official conference call வந்தது...
எதோ US client -ஆம்...Avoid பண்ண முடியாதாம்...
நிவாஸ் Bluetooth-ல call attend பண்ணிகிட்டே car drive பண்ணான்...
இந்த US தொழிலதிபர்கள் தொல்ல தாங்க முடியலட சாமி!
9.15 pm -- Back to மார்த்தஹல்லி!
நிவாஸ் கார் மார்தஹல்லி bus stop கிட்ட வந்தது.
"ஹே! Volvo city bus ready-யா நிக்குது -- இத புடிச்சா சீக்கிரம் போயிடலாம்!"
- நிவாசும் ப்ரியாவும் chorus-ஸா சொன்னாங்க
நான் நிவாஸ் காருல இருந்து Bus-க்கு shift ஆனேன்...
But 45 minutes-ல Majestic போயிரலாமா???...தெரியல... ....!!!
.... .... ....
இரவு மணி பத்தாச்சு
Unbelievable!! ஒரு வழியா நான் வந்த Bus Majestic Reach ஆச்சு!
இதே Distance-அ Evening Peak Hour Traffic-ல கடந்து போகும்போது ஒன்னரை மணி நேரம் ஆனதுதான் என்னோட பயத்துக்கு காரணம்!
Mission Ends!
All credit goes to Nivas, Priya & Vasanthi (with their family support)!


