Sunday, 6 December 2009

Paa


Paa...ஹிந்தி படம்...அமிதாப் பச்சன் & அபிஷேக் பச்சன்...நெஜதுக்கு புறம்பா மகன் அப்பாவா நடிச்சு வெளி வந்திருக்குற படம்...படம் ரொம்ப சிறப்பாவும் Touching-ஆவும் இருக்கறதா நம்ப தகுந்த வட்டாரங்கள்ளருந்து தெரிய வருது...

பொதுவா ஹிந்தி படங்கள்ல எனக்கு பெரிய ஈடுபாடு கிடையாது...ஏன்னா எனக்கு ஹிந்தி தெரியாது! எப்டியாவது கத்துக்கணும்னு நான் School Days நெனச்சதுண்டு...But அதுக்கு நான் பெருசா முயற்சிகள் எடுக்கலை...
எடுத்த சின்ன சின்ன முயற்சிகளுக்கும் பலன் இல்லாமலேயே போயிரிச்சு...

ஆனாலும் ஹிந்தி படம் தியேட்டர்ல போயி கூட பாத்துருக்கேன்...'ஊர்மிலா & சஞ்சய் தத் நடிச்ச 'DAUD' அப்டீங்கற ஹிந்தி படம் கோவில்பட்டி ஷண்முகா தியேட்டர்-ல ரிலீஸ் ஆச்சு...நானும் ராபர்டும் சேர்ந்து போனோம்...அவனுக்கு ஹிந்தி தெரிஞ்சதுனால அப்பப்போ Meaning கேட்டுகலாமேனு...அட! A.R.R.ரஹ்மான் Music-க்காக'தான் 'DAUD' போனோம்'பா - அப்டீன்னு வெளிய சொல்லிகர்றதான்! படம் ஓடும் பொது நடு-நடு'வுல "அவன் என்ன சொன்னான், அவ என்ன சொன்னா" - இப்டி கேட்டு கேட்டு இம்சை பண்ணதுல ராபர்ட் நொந்து Noodles ஆனது வேற கதை!

அது போகட்டும்...

So, பொதுவா ஹிந்தி படங்கள்ல எனக்கு ஈடுபாடு கிடையாது..
ஆனா, Paa - இதுல விதிவிலக்கு...காரணம் இளையராஜா...
இந்த படத்துக்கு இளையராஜா-தான் மியூசிக்...

படத்தோட ஸ்கிரிப்ட் அவருக்கு பிடிச்சதுனா அதுக்கப்புறம் அவர் கிட்டருந்து அருவி மாதிரி Tunes வருமே...இதுலயும் அப்படிதான் வந்துருக்கு...எல்லா பாட்டுமே சும்மா நச்சுனு இருக்கு...
கண்ண மூடிகிட்டென்ன....காதைத் தவிர எல்லாத்தையும் மூடிகிட்டே கேக்கலாம்...கேட்டுகிட்டே இருக்கலாம்...
Typical ஹிந்தி Songs-ஓட சாயல் கொஞ்சம் கூட இல்ல...
Infact, karaoke -ல கேட்டா தமிழ் பாட்டு மாதிரிதான் இருக்கும்...கொஞ்சம் அங்க அங்க அவரோட பழைய Tunes-யும் Use பண்ணிருக்கார்...

குறிப்பா பவதாரணி Voice-ல "Gumm Summ Gumm" இளையராஜாவோட Golden Tunes-ச ஞாபகப் படுத்துது...
இதுல ஒரு Drawback என்னென்னா...மொத்தம் எட்டு Tracks-ல நாலு தான் Normal length...மத்ததெல்லாம் Bit song-தான்...
So இந்த இசை அருவில அளவாதான் நனைய முடியும்!
அப்படி நனைய ஆசை படுறவங்க
இந்த Link-அ Click-கலாம்!

Monday, 18 May 2009

Swayed by Hard focus !!


1) ஒரு நல்ல புஷ்டியான Black Dog வந்து என்னைய பயமுறுத்திச்சு…
- இது நேத்து ராத்திரி நான் கண்ட கனவுல நடந்தது…

2) ஆர்யா நடிச்ச ‘சர்வம்’ படம்…
- இது நேத்து Matinee show நான் பார்த்தது…

மேல சொன்ன ரெண்டு Statement-கும் என்ன சம்பந்தம்னு 'சர்வம்' படத்துனால பாதிக்க பட்டவங்களுக்கும் இனிமே பாதிக்கப்படப் போறவங்களுக்கும் நல்லாவே புரியும்…!!

'சர்வம்' – படம் பார்க்க நான் ஏன் போனேன்…
நல்ல Music (யுவன்) + நல்ல Direction (விஷ்ணுவர்த்தன்)
+ நல்ல Acting (ஆர்யா / த்ரிஷா)
– இப்டியெல்லாம் நம்பிதானே…

But இது எல்லாமே இருத்தும் – STORY-தான்ன்ன்….
படத்ல கதையே இல்லன்னு நான் சொல்ல வரலை…
But எடுத்துகிட்ட Story நல்லாவே இல்ல…Great disappointment…

மத்தபடி, Camera work ரொம்பவே பிரமாதமா இருந்தது…
Forest scenes-லாம் Blue filter போட்டு பகல்ல shoot பண்ணி, நெஜமாவே இருட்டுல நடக்குற மாதிரி காமிச்சிருக்கார் Camera man நிரவ் ஷா…

அப்புறம் யுவனோட கை வரிசைல Songs-லாம் கேட்க நல்லா இருக்கு…
குறிப்பா ‘சுட்டா சூரியன’ song-ல இளையராஜாவோட “மேகம் கருக்குது மழை வரப் பாக்குது” – bit‘அ insert பண்ணது super…

“காற்றுகுள்ளே..” song picturisation ரொம்ப வித்யாசமா இருந்தது…


படத்ல ரொம்ப ரசிக்க வச்ச ஒரு அம்சம்,
இளையராஜாவோட Violin + Guitar piece Re-recording-அ,
ஆர்யா - த்ரிஷா meet பண்ற scenes-க்கு use பண்ணிய விதம்…

இருபது வருஷதுக்கு முன்னாடி அப்பா compose பண்ணி வச்சத மகன் ரொம்ப உரிமையோட இப்போ Apply பண்ணி இருக்கார்…
Really nice to listen (Have your try in the above esnips widget)

படத்ல soft focus => த்ரிஷா ;
Hard focus => அந்த பயங்கரமான Black Dog !

Bachelors-க்கு எப்படியோ எனக்கு தெரியல…
But என்னோட கனவுல அந்த Black Dog-தான் வந்து மெரட்டுச்சு…!!

Saturday, 7 February 2009

எப்படி இருந்த நாங்க, இப்படி ஆயிட்டோம் !!

எப்படி இருந்த நானும் அருணும்...>>


....
....
....

இப்படி ஆயிட்டோம் !! >>