கோபியும் எனக்கு ரொம்ப சின்ன வயசிலேயே பரிட்சயம் ஆயிட்டான்… எனக்கு அருண் பிரகாஷ் familiar ஆன அதே Little Flower school-அ-தான் இவனும்… …
அதாவது 1985-ல… அப்போ இந்திரா காந்தி இறந்து ஒரு வருஷம் கூட ஆகலை…
Terrorist and Disruptive Activities (Prevention) Act (TADA) parliament-ல அமுல் படுத்தப்பட்ட வருஷம் அது…
கோபியோட அப்பா ஸ்கூலுக்கு அவன சைகிள்ல கூட்டிட்டு வருவாரு…
எனக்கு ரொம்ப நல்லா ஞாபகம் இருக்குன்னு சொல்ல முடியாது…
but light-ஆ… …
சைகிள்ல back side carrier-ல வச்சா கீழ விழுந்துருவான்னு front side mini seat-ல வச்சு ரொம்ப careful-ஆ கூட்டிட்டு வருவாரு அவன் அப்பா…
அப்போ எங்க ரெண்டு பேரோட வீடும் V.O.C. நகர்ல இருந்ததுனால அடிக்கடி ஸ்கூலுக்கு போகும் போது or வரும்போது அப்பபோ பாத்துக்குவோம்…
1986 ஜூன் வந்தது,
கோபி, நான், எல்லாம் 1st STD-க்கு promote ஆனோம், சானியா மிர்சா மும்பைல பிறக்கறதுக்கு முன்னாடியே (சானியா பிறந்தது அதே வருஷம் நவம்பர் 15th) !
நல்லவேளை அப்போ 1st STD-க்கு entrance test-லாம் இல்ல…!
But சானியா மிர்சா பிறந்ததுக்கும் நாங்க pre-school pass பண்ணதுக்கும் Chaos theory-படி பார்த்தா கூட ஒரு சம்பந்தமும் கிடையாது !
1987 முடிவுல M.G.R -கும் ஒரு முடிவு வந்துருச்சு…
1988–ல Little flower ஸ்கூல் கோபிக்கு பிடிக்கலையோ என்னமோ, அவன் வேற ஸ்கூலுக்கு 3rd STD படிக்க போயிட்டான்…
1989 :
Lok Sabha elections முடிஞ்சு V.P. சிங்க் Prime Minister ஆனாரு…
உத்தர் பிரதேஷ்-ல முலாயம் சிங்க் யாதவ் first time chief minister ஆனாரு…
1990 :
நவம்பர்ல - V.P. சிங்க் PM post-ல இருந்து resign பண்ணிட்டாரு…
Ok…ok… title - "கோபி, நான், மற்றும் பலர்னு" சொல்லிட்டு இவன் பாட்டுக்கு, இந்திரா காந்தி - M.G.R - V.P சிங்க் -னு News reel ஒட்டிக்கிட்டு இருக்கானேன்னு நெனைக்க வேண்டாம்…
Superstar வெறும் 40 நிமிஷமே வந்தாலும் குசேலன் Rajni படம்தானே…!!
1991 : நாட்டுல பல மாற்றங்கள் நடந்தது இந்த வருஷம்தான்…
மே 21 :- இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்குன great Prime Minister ராஜீவ் காந்தி படு கொலை செய்யப்பட்டார்...
ஜூன் 21 :- P.V. நரசிம்ம ராவ் Prime Minister ஆனாரு…
ஜூன் 24 :- ஜெயலலிதா முதல் முறையா தமிழ்நாட்டோட chief minister ஆனாங்க…
இது எல்லாத்தையும் விட ஒரு historical event -உம் நடந்தது !
கோபி, அருண், பாலாஜி, சங்கர், நான் மற்றும் பலர் NHSS-குள்ள காலடி எடுத்து வைச்சோம்…!!
ஸ்கூல் days-ல கோபி நல்லா படிப்பான், but அவனுக்கு hand writing-தான் அவ்வளவு சரியா வரலை…
ஒரு தடவை, அவனோட அம்மா (C.விஜயலக்ஷ்மி Madam) கோபிகிட்ட என்னோட handwriting-அ compare பண்ணி சொன்னது இன்னும் ஞாபகம் இருக்கு :-
“கோபி, இங்க பாரு இவன் எப்படி அழகா எழுதுறான்னு பாரு, நீயும் இதே மாதிரி எழுத கத்துக்கோடா"
“என்ன கொடுமை, CV madam, இது !” (நான் மனசுக்குள்ள நெனச்சுகிட்டேன்!)
கோபி அம்மா-கிட்ட science tuition படிச்சத பத்தி ஒரு தனி episode-ஏ சொல்லலாம்…
10th STD-ல நான், ராபர்ட், ஸ்ரீராம் மற்றும் பலர் கொண்ட குழு கோபி வீட்டுக்கு CV madam-கிட்ட science படிக்க போனோம்…
கோபி அம்மாவா நல்லா jovial-ஆ பேசுனாலும் CV madam-ஆ அவங்க ரொம்ப strict…strict…strict…!!
Physics, chemistry, Biology – எல்லாத்துக்கும் தனித் தனி Long size note போட வச்சி… Science - Definitions / concepts எல்லாம் clear-ஆ heading-oda எழுத வச்சி…Weekly test வச்சி Marks போட்டு…செம training-தான் போங்க…
Class-ல கருப்பசாமி sir குழப்புன (!) அதே Science subject-அ,
CV madam எங்களுக்கு நல்லா புரிய வச்சாங்க…
அவங்க கிட்ட படிச்ச எல்லாரையும் 10th –ல நல்லா score பண்ணவும் வச்சாங்க…
கருப்பசாமி sir Class எடுக்குற style-ஏ தனிதான்…
முக்கியமா அவரோட English pronunciations எல்லாமே oru ‘Typical’-ஆ-தான் இருக்கும்…
அவரு conduct பண்ணின ONE WORD test எல்லாம் அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்க முடியாது… ஒரே period-ல Test வச்சி results-அயும் announce பண்ணிருவாரு…
ஏன்னா test paper valuation பண்ற வேலைய நம்ம கிட்டயே விட்டுருவாரு… Test அன்னைக்கு பாத்தீங்கன்னா class-குள்ள ஒரே exchange மேலா-தான்…!!
யாரு paper யாரு கிட்ட போகும்னே சொல்ல முடியாது…
எந்த answer-உம் தெரியலேனாலும் அப்போ அது கூட ஒரு ஜாலியாதான் இருந்தது…
நம்ம கோபி, கருப்பசாமி sir-க்கு நல்ல pet student-ஆ இருந்தான்னா அதுக்கு அவன் science-ல வாங்குன marks தான் காரணம்…
கோபி அவன் அம்மா சொன்னதுக்காக மட்டுமில்லாம,
ஒரு self-determination-ஓட Hard work பண்ணான்…
அதனோட result-தான் :- Hand-writing improve பண்ணது, +2-ல நல்ல marks வாங்குனது, Anna University-ல சேர்ந்தது , Campus interview placement, HCL, IBM...
- இப்டி பல உயரங்கள தொட்ட கோபியப் பத்தி சொல்லாம இருந்தா எப்படி !!



